200 அடி ஆழம்.. 6 வயது குழந்தை..16 மணி நேரம்.. திரைப்பட பாணியில் உயிர் போராட்டம்!

Home > தமிழ் news
By |

200 அடி ஆழ்துளை குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்டெடுக்கும் படலம் மகாராஷ்டிராவில் நேற்று மாலை முதல் நடந்து வந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தொரண்டல் கிராமத்தில் சாலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அவரது 6 வயது ஆண் குழந்தைதான் ரவி பண்டிட். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ரவி பண்டிட், மாலை 6 மணி ஆனதும் காணாமல் போயிருக்கிறான்.

எங்கு தேடியும் கிடைக்காத குழந்தையை பெற்றோர்கள் தேடி அலைந்துகொண்டே இருந்தபோது, அங்கு போர்வெல்லுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டதும் பெற்றோர்களுக்கு திடுக் என்றிருந்திருக்கிறது. உடனே அங்கு மக்கள் கூட்டம் கூடியது. போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள், கயிறு மூலம் குழந்தையை மீட்டெடுக்க முயன்றனர். ஆனால் அது தோல்வியடைந்ததால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படைக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்களும் புறப்பட்டனர். இதனிடையே குழந்தை இருக்கும் திசைக்கு நேராக வேறு ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி, குழந்தையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். பின்னர் பேரிடர் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது குழந்தைக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. ஆனாலும் மண்ணைத் தோண்டுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பாதிக்கு மேல் பாறையாக இருப்பதால் குழந்தையை காப்பாற்றுவதில் இழுபறி ஏற்பட்டது.

எனினும் குழந்தையை மீட்டுவிடுவோம் என அவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் 16 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 6 வயது குழந்தை ரவி பண்டிட் வெற்றிகரமாக மீட்கப்பட்டார். திரைப்பட பாணியில் நடந்திருக்கும் இந்த செயலால் அப்பகுதி மக்கள் பெருத்த சோகத்தில் இருந்து மீண்டதோடு, குழந்தை மீட்கப்பட்டதற்கு  தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

MAHARASHTRA, BOREWELL, PUNE, BIZARRE, RESCUE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS