பக்கவாதத்தால் பிரிந்து சென்ற மனைவி...தந்தைக்கு தாயக மாறிய சிறுமி!
Home > தமிழ் newsசீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு தாயக மாறி கவனித்து வரும் சிறுமியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
சீனாவை சேர்ந்த சிறுமி ஜியா ஜியா.இவரின் தந்தை டியன் ஹைசெங்கின் கடந்த 2016-ம் வருடம் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து கழுத்துக்குக் கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல்படாமல் போய்விட்டது. விபத்து நடந்த அடுத்த 2 மாதங்களில் அவரின் மனைவி, கணவரையும் குழந்தையையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு தன் பெற்றோர், குழந்தையுடன் மட்டுமே டியன் வாழ்ந்து வருகிறார். தாய் விட்டுச் சென்ற பிறகு சிறுமிதான் தந்தையைக் கவனித்துக்கொள்கிறார்.
தினமும் காலை 6 மணிக்குத் தூங்கி எழும் ஜியா அடுத்த அரை மணி நேரம் தந்தையின் கால், கைகளில் மஸாஜ் செய்கிறார். பிறகு அவருக்குப் பல் துலக்கிவிட்டு, காலை அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். பிறகு தன் வேலைகளைச் சிறுமியே பார்த்துக்கொண்டு பள்ளி புறப்படுகிறார்.
ஜியா பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் அவரின் தாத்தா, பாட்டி தந்தை டியனைப் பார்த்துக்கொள்கின்றனர். பள்ளி முடிந்து வந்ததும் சிறுமி தந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து இரவு உணவு முதற்கொண்டு அவருக்கு ஊட்டி விடுகிறார்.
ஜியாவும் அவரது தந்தையும் இருக்கும் படத்தை ஹைசெங்கின் சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.உடல்நிலை சரியில்லாத தந்தைக்குத் தாயாக இருந்து பார்த்துக்கொள்ளும் இந்த குட்டி தேவதை பலரது நெஞ்சங்களை வென்று விட்டார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Woman Claims To Have Found Sanitary Napkins In Her Food Twice In Two Days
- தாயின் விபரீத ஆசையால்....அந்தரத்தில் தொங்கிய 5 வயது சிறுவன்!
- வருமானத்தை விட அதிக ‘வரதட்சணை’ கொடுக்கும் மணமகன்கள்..சமாளிக்க புதிய முடிவு!
- WATCH | Woman Throws Garbage On Road; Biker Gives Her A Taste Of Her Own Medicine
- விமானத்தில் ப்ரோபஸல்.. ஏற்றுக்கொண்ட பணிப்பெண்ணின் நிலை!
- Delivery man fired after caught eating customer's food
- Watch - Woman takes BMW for test drive, crashes into showroom
- கல்லூரி மாணவர்கள் இனி 'முகத்தை காட்டிதான்' வருகை பதிவு செய்ய வேண்டும் !
- பேஸ்புக்குடன் போட்டாபோட்டி.. 'மியூசிக்கலி'யைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
- கூகுளை தள்ளிவைத்த 'சீனா'வுக்கு .. சுந்தர் பிச்சையின் பதில் இதுதான்!