பேஸ்புக், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ், லைக்ஸ் பெற வேண்டும்: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!
ஒரிரு மாதங்களில் மத்திய பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகளின் தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி வித்தியாசமான முறையில் தனது கட்சிப்பணிகளை அணுக ஆரம்பித்துள்ளது. அதாவது, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்பவர்களுக்கு வித்தியாசமான நிபந்தனை ஒன்றை வகுத்துள்ளது.
அதன்படி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வோரின் முகநூல் பதிவில் 15,000 லைக்ஸ், ட்விட்டரில் பின்தொடர்வோர் 5,000 பேர் என்றெல்லாம் இருக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது.சமூக இணையதள பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலும் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மனுதாரர் தம் முகநூல் மற்றும் ட்விட்டரில் வெளியாகும் கருத்துகளுக்கு பதில் அளித்திருக்கவும் வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும், தமது தொகுதிகளின் வாக்குச்சாவடி பகுதிகளுக்கு வாட்ஸ் அப் குழுமங்களும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே மனு தாக்கல் செய்தவர்கள் செப்டம்பர் 15-க்குள் தம் சமூக வலைதள விவரங்களையும் அனுப்ப வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் தொடக்கத்திலேயே இந்தமுறை காங்கிரஸ் கட்சி சமூக வலைதள பிரச்சாரங்களைத் தீவிரமாக்க முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மீதான இதே நிபந்தனைகளை ஏற்கனவே ம.பி. காங்கிரஸில் இருக்கும் நிர்வாகிகளும் அமல் படுத்த வேண்டும் எனவும் அந்தக் கடிதம் கூறுகிறது. காங்கிரஸின் இந்த இளையதள பிரசாரம் பாஜக-விற்கு கடும் போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- WATCH: Lion Jumps Into Safari Vehicle; Gives Tourists The Shock Of Their Lives
- WATCH: Hotel Staff Break Into Dance After Homosexuality Is Legalised In India
- Sleepy School Boy Wears Chair On His Back Instead Of Bag; Watch The Viral Video
- Teacher's Day Special: Nation Pays Tribute To Dr. Sarvepalli Radhakrishnan
- Man Blackmails Girlfriend To Install Spy Camera In Girls Hostel Bathroom
- மாணவி சோபியா புலிகளின் ஆதரவாளர்: சுப்ரமணிய சுவாமி!
- தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நடந்த கோஷ்டி மோதல்!
- Worm In Veg Biryani, Alleges Customer; Company Fined ₹11,500
- Navy Officer Arrested Over Charges Of Raping Kerala Woman
- PETA Lands In Controversy After Tweet On Krishna Jayanti; Twitter Hits Out