ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ராணுவவீரர் ஒளரங்கசீப் என்பவர், ஈகைத்திருநாளுக்கு தனது வீட்டுக்கு செல்லும் வழியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணியில்  காவல்துறையினர்  ஈடுபட்டனர்.ஜூன் 14-ம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

 

பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டும், சுடப்பட்டும்  அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து அவரது மரணத்துக்கு காரணமான பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்தநிலையில் சவுதியில் பணியாற்றி வரும் அவரது நண்பர்களுக்கு ஒளரங்கசீப் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் 50 பேர் தங்கள் நண்பனைக் கொன்ற பயங்கரவாதிகளை பழிவாங்க, தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாட்டு வேலையை உதறி சொந்த கிராமத்துக்கு(மெந்தர்) திரும்பியுள்ளனர்.

 

அவர்கள் அனைவரும் போலீஸ் அல்லது ராணுவத்தில் சேர்ந்து தங்கள் நண்பனின் மரணத்துக்குக் காரணமான பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொருட்டு, இந்திய மண்ணில் காலடி வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், '' ஒளரங்கசீப்பின் மரணம் குறித்து கேள்விப்பட்ட அன்றே சவுதியில் இருந்து கிளம்பத் தயாராகி விட்டோம்.இந்த லட்சியம் ஒரே நொடியில் நடந்து விடாது. ஆனால் எங்கள் நண்பனின் கொலைக்குக் காரணமானவர்களை பழிவாங்குது ஒன்றே எங்கள் லட்சியம்,'' என தெரிவித்துள்ளனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS