"ஸ்டாப் மீட்டிங்கை இப்படி கூட நிறுத்தலாம்"...வங்கியில் நுழைந்த மலைப்பாம்பால் பரபரப்பு!

Home > தமிழ் news
By |
"ஸ்டாப் மீட்டிங்கை இப்படி கூட நிறுத்தலாம்"...வங்கியில் நுழைந்த மலைப்பாம்பால் பரபரப்பு!

சீனாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாளர்களுடன் காலை நேரத்தில் நடக்கும் கூடத்தின் போது மேற்க்கூரையில் இருந்து விழுந்த மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தெற்கு சீனாவின் நன்னிங் நகரிலுள்ள வங்கியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமாக வங்கி ஊழியர்களுக்கான கூட்டமானது நடந்துகொண்டிருந்தது.அப்போது மேற்க்கூரையிலிருந்து திடீரென மலைப்பாம்பு ஒன்று கூட்டம் நடக்கும் இடத்தில் விழுந்தது.இதனை கண்ட ஊழியர்கள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.

 

பின்னர் மலைப்பாம்பானது அங்கிருந்த சோபாவின் அடியில் புகுந்தது.உடனடியாக இதுகுறித்து வனபாதுகாப்பு  துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த வனபாதுகாப்பு ஊழியர்கள் பாம்பை பிடித்து சென்றார்கள்.இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

5-FOOT PYTHON, STAFF MEETING, CHINA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS