பனிப்பொழிவு: டிரெக்கிங் சென்றபோது மாயமான 45 கல்லூரி மாணவர்களின் நிலை?

Home > தமிழ் news
By |

ஹிமாலசப் பிரதேசத்தின் லாஹூல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களுக்கு அருகே உள்ள பனிமலை பகுதிகளுக்கு டிரெக்கிங் போன 45 மாணவர்கள் மாயமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்களில் அம்மாநிலத்தின் ‘ஐஐடி- ரூர்க்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் இருந்து போன மாணவர்களே 42 பேர்.

 

இந்த நிலையில், தற்போதைய தகவல்களின்படி, இந்த மாணவர்கள்  கண்டுபிடிக்கப்பட்டு, மணலி அருகே உள்ள கோக்‌ஷார் ராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அதோடு, அதிக பனிப்பொழிவும், மழை பொழிவும் தொடர்ச்சியாக இருக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில் இருப்பதனால், வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் பலி ஆகியுள்ளனர்.

 

பெற்றோர்களும் அச்சத்தில் இருப்பதால், மணலி முதல் குல்லு வரை உள்ள சில பகுதிகளில் இருந்து பாராஷூட் கிளைடிங், மலையேற்றம், பனிச் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பலவற்றிற்கும் தற்காலிக தடை விதித்து, அம்மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIMACHALAPRADESH, SNOWFALL, MISSINGSTUDENTS, IITROORKEE, TREKKING

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS