மளமளவென விற்றுத் தீரும் தண்ணீர் கேன்கள்: ஸ்டிரைக் எதிரொலி!

Home > தமிழ் news
By |

தமிழ்நாட்டி சுமார் 300-க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் கேன் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள், நிலத்தடி நீரை எடுத்துதான் மினரல் வாட்டர் உற்பத்தியினை செய்து வருகின்றன. 

 

எனினும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள நிலத்தடி நீரை எடுப்பதற்கு கடந்த 2014ல் அரசு தடை விதித்தது. மேலும் தமிழக அரசின் தடையில்லா சான்றினை பெற்று முறையான உரிமம் வைத்திருந்தால் மட்டுமே தண்ணீர் எடுக்க அனுமதித்திருந்தது. 

 

அப்போதே அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சுமார் 75 குடிநீர் நிறுவனங்களுக்கு மீண்டும் பதில் அளிக்கும் வகையில், தற்போது தமிழ்நாடு அரசு வர்த்தக ரீதியில்  நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள்  எடுப்பதை தடை செய்யும் பொருட்டு இந்த ஆணை பிறப்பிக்கப்படதாகக் கூறியுள்ளதோடு, எதிர்காலத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்பு அக்கறையின் பேரில் தமிழக அரசுக்கு இதை செய்ய உரிமை உள்ளதாக நீதிமன்றமும் கருத்து கூறியுள்ளது. 

 

இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் முரளி, “மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டும்  நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்களுக்காவது நீர் எடுக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற ஆணையை வாபஸ் பெறவில்லை என்றால் குடிநீர் விற்பனையை செய்ய முடியாது என்றும் கூறி, அதுவரை கேன் வாட்டர் உற்பத்தி மற்றும் சப்ளையினை 300 நிறுவனங்களும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார். 

 

இதனை அடுத்து தற்போது இருக்கும் தண்ணீர் கேன்கள் ஜெட் வேகத்தில் விற்றுத் தீர்ந்தபடி வருகின்றன.

MINERAL WATER CAN, TAMILNADU, WATERCANSTRIKE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS