ஈரோடு நகரத்தின் சாஸ்திரி நகரில் உள்ளது கார்த்திக் என்பவரது வீடு. வரப் போகும் தீபாவயை ஒட்டி பட்டாசு வியாபரம் செய்வதற்காக சிவகாசியில் இருந்து இரண்டு மினி டிரக்குகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்துள்ளார் கார்த்திக்.

 

அங்கு அவர் மினி டிரக்குகளில் இருந்து இரண்டு உதவி ஆட்களுடன் பட்டாசுகளை தன் வீட்டில் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இம்மூவரில் யார் மூலமோ தீப்பற்றத் தொடங்கியுள்ளது. அந்த தீப்பொறி பட்டாசுகளின் மீது பட்டவுடன், எதிர்பாராத அளவில் குபீரென பற்றிய தீயினால் பெரும் தீவிபத்து உண்டாகியது.

 

இதில் அந்த இரண்டு வேலை ஆட்கள் சம்பவம் இடத்திலேயே அடையாளம் தெரியாத அளவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் தீப்பற்றியதால் கார்த்திக்கும் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். திடீரென்று ஏற்பட்ட பெருவெடிப்பு அப்பகுதியில் இருக்கும் சில வீடுகளின் மீது சிதறியதால், கிட்டத்தட்ட 9 வீடுகளின் தரையிலும் கூரையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

BY SIVA SANKAR | SEP 12, 2018 1:50 PM #FIRECRACKACCIDENT #ERODE #DIWALI #SIVAKASICRACKS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS