கனமழை காரணமாக வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இதே போல் காவிரி கரையோரத்தில் இருக்கும் மக்களும் அபாய எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் விளைநிலங்கள் இதனால் பயனடையும் என்பதாலும், வைகை அணையின் நீர்மட்டம் 68.6 அடியாக உயர்ந்ததனாலும்  நாளை முதல் முதல் 120 நாட்களுக்கு தொடர்ந்து, பாசன வசதிக்காக வைகையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

 

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின்  நீர்பிடிப்பு பகுதியான முல்லைப்பெரியாறு அணையிலிருந்து, கேரள கனமழை காரணமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  தவிர வருஷநாடு, மேகமலை  பகுதிகளில் மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியது, அதுசமயம் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

 

இதனிடையே இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 68.6 அடியாக உயர்ந்ததை அடுத்து, அந்த தண்ணீரை திறந்துவிடப்படும் வழிப்பாதையில் இருக்கும் 5 மாவட்டத்தின் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டுள்ளது. ஆனால் இன்னும்  இரண்டொரு நாளில் வைகை அணை முழுகொள்ளளவை எட்டிவிடும் என்பதால் அணையின் நீர்மட்டம் மேற்கொண்டு 69 அடியாக உயர்ந்தால் அடுத்த கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஈரோடு வெள்ளம் புகுவதற்கு முன்பே இந்த தண்ணீரை மேற்கண்ட 5 மாவட்டங்களுக்கு திருப்பியிருந்தால் அந்த தஞ்சாவூர்  உள்ளிட்ட 6 மாவட்ட மக்கள்,  தண்ணீர் கேட்டு போராடியிருக்கவும் மாட்டார்கள், ஈரோட்டில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அந்தா மக்கள் தத்தளித்திருக்கவும் மாட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கொடிபிடித்தபடி உள்ளனர்.

BY SIVA SANKAR | AUG 19, 2018 12:04 PM #TNFLOOD #MADURAI #KERALAFLOOD #VAIGAIRIVER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS