28 வருஷம் போதும் கவர்னர் சார்? கருணை காட்டுங்க ப்ளீஸ்: விஜய் சேதுபதியின் வைரல் ட்வீட்!

Home > தமிழ் news
By |

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. 

 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிக்கச் சொல்லி, திரை உலகில் முக்கிய இயக்குநர்கள் பலரும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் எழுப்பி, ஆளுநரின் உதவியோடும், ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடும் நிறைவேற்றலாம் என மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்தன. 

 

இதனை அடுத்து தமிழக அரசு அதற்கான முயற்சியை எடுக்கும் விதமாக, அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இறுதியான முடிவு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இருக்கிறது.

 

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது வெறும் தமிழ் பிரச்சனை மட்டும் அல்ல.. மனித உரிமை நிலைநாட்டப்படவேண்டியதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரும் வேண்டுகோள் இது... மரியாதைக்குரிய கவர்னர் அவர்கள் கருணை காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அர்த்தம் வருமாறு ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதோடு, அதற்கு கீழே ஹேஷ்டேகில், ‘#28YearsEnoughGovernor’ என்றும் சேர்த்துள்ளார். தற்போது இந்த ஹேஷ்டேகும், விஜய் சேதுபதியின் கருத்தும் வைரலாகி வருகின்றன. 

 

VIJAYSETHUPATHI, TWEET, VIRAL, TRENDING, TAMILNADUGOVERNOR, 28YEARSENOUGHGOVERNOR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS