கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழகத்தில் இருந்தும் இந்தியாவின் பிற  தேசங்களில் இருந்தும் சுமார் 150க்கும் மேற்பட்ட பயணிகள், கைலாஷ்-ரிஷிகேஷ்  தரிசனத்துக்காகவும் மற்றும் சில வியாபார விஷயங்களுக்காகவும் நேபாளம் சென்றனர்.

 

அவர்கள் சென்ற சில நாட்களிலேயே  மோசமான வானிலை காரணமாக, முன்னால் நிற்பவர் கூட கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு கடும் புயல்மழைத் தொடங்கியது. இதனால் உணவு-மின்சாரம்-செல்போன் நெட்வொர்க் போன்ற சவுகரியங்கள் கிடைக்காமல் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் அவர்கள் தவிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இதற்கிடையில் அங்கிருக்கும் பயணிகள் இதுகுறித்து தமிழக முதல்வருக்கும், தமிழ்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

அதே சமயம், இந்த பேரிடரில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுள் ஒருவரான நாமக்கலைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், ராணுவ ஹெலிகாப்டர் வந்தால் மட்டுமே தங்களை மீட்க முடியும் என்றும், தயவு செய்து அதற்கான ஏற்பாடுகளை பேரிடர் கால முறையில் ஏற்படுத்தித் தருமாறு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

BY SIVA SANKAR | AUG 6, 2018 12:24 PM #FLIGHT #NDRF #INDIA #NEPAL #TAMILANS #DISASTER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS