அசுரவேகத்தில் வந்த அரசுப்பேருந்து .. பணியில் இருந்த காவலர்களுக்கு நேர்ந்த சோகம்!

Home > தமிழ் news
By |

காஞ்சிபுரம் அருகே போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்த காவலர்கள் இருவர் மீது வேகமாக வந்த அரசு பேருந்து குத்தித் தூக்கிவிட்டு நிற்காமல் சென்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து சற்றே நெரிசலாக இருக்கும் சாலை முனையம் ஒன்றில் நின்றபடி காவலர்கள் இருவர் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆயுதப்படையில் பணிபுரியும் செல்லத்தங்கம் மற்றொருவர் சிறப்பு காவல் படை பிரிவைச் சேர்ந்த அருள்முருகன்.

இவர்கள் இருவரும் கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சற்று இடைவெளி விட்டு தள்ளி  நின்றபடி போக்குவரத்தினை சரிசெய்துகொண்டிருந்ததோடு, நெடுஞ்சாலை வாகனங்களின் குறுக்கே சென்று நிறுத்தி சாலைகளை குறுக்குவாட்டில் கடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக உதவி செய்துகொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியாக கல்பாக்கத்தில் இருந்து வந்த அரசுப்பேருந்து வெகுவேகமாக வந்ததோடு சாலையின் குறுக்கே நின்ற செல்லத்தங்கம் மற்றும், சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த அருள்முருகன் இருவரையும் அடுத்தடுத்து இடித்து தூக்கிக்கொண்டு நிற்காமல் சென்றுள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை உடனடியாக பரபரப்புக்கும் கூச்சலுக்கும் ஆளாக்கியது. 

அதன்பின்னர் அரசுப்பேருந்து ஊழியர் கந்தசாமி கைதுசெய்யப்பட்டார். விபத்துக்குள்ளான காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ACCIDENT, BUS, FASTDRIVE, SPEED, POLICE, TRAFFIC, CHENNAI, BIZARRE, KANCHIPURAM, NATIONALHIGHWAY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS