இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 

இந்த இலவச தொலைபேசி எண்ணான  14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

 

மேலும் அவர் கூறுகையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அடுத்த ஆண்டு 3 லட்சம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளியில் சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசு பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த எண் மூலம் மாணவ- மாணவிகள் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

 

இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BY JENO | AUG 14, 2018 4:14 PM #SCHOOLSTUDENT #HELPLINE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS