நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பிடிபட்ட காரை பரிசோதித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி!

Home > தமிழ் news
By |

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதற்கு வயது வரம்புகள் தொடங்கி, அவற்றுக்கு முறையான உரிமம் பெறுவதற்கென பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

 

எனினும் கிராமப்புறங்களில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வயது வரம்புகள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை என்கிற கருத்தும் உள்ளது. உள்ளூர்களுக்குள் வண்டி ஓட்டுகிறவர்கள் பெரும்பாலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதுமில்லை, வண்டி ஓட்டுவதற்கான வயதை பார்ப்பதும் இல்லை.  

 

ஆனால் கடந்த 2014-ஆம் வருடம் குஜராத்தில் கார் ஓட்டிவந்த 14 வயது சிறுவன் ஒருவன் சாலையில் இருந்தவர்களின் மீது மோதிய சம்பவம் அனைவரிடையேவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில் இதே போல் விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வாகனம் ஓட்டிவந்த 14 வயது சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டதை அடுத்து, கார் உரிமையாளர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 

 

காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போலீசார், அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி பார்த்து, அந்த காரை 9 ஆம் வகுப்பு படித்து வரும் கிஷந்த் என்கிற 14 வயது சிறுவன் ஓட்டி வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, கார் உரிமையாளரும் சிறுவனின் மாமாவுமான ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

CAR, 14YROLDBOY, DRIVING, LICENSE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS