கல்கத்தாவில்  கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியபோது, அங்கு அதிச்சியடைய வைக்கும் மர்ம சம்பவம் நிகழ்ந்துள்ளதை அறிந்த நில உரிமையாளர்கள் பதட்டமாகியுள்ளனர்.

 

கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் கட்டுமானப் பணிக்காக காலி நிலம் ஒன்றை தோண்டியபோது, அங்கு தோண்டத் தோண்ட, இறந்து புதைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சடலங்கள் கிடைத்துள்ளதுதான் அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம். 

 

இறந்து போன குழந்தைகளின் பூத உடலில் ரசாயனத்தை பூசி அக்குழந்தைகள்  பிளாஸ்டிக் பேக்குகளில் அடைக்கப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சில குழந்தைகள் சிசு எனப்படும் கரு குழந்தைகள் ஆவர். மொத்தம் 14 குழந்தைகளின் சடலங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த மர்ம சம்பவ குறித்து  கொல்கத்தா போலீசார் விசாரித்து வருகின்றனர். 

BY SIVA SANKAR | SEP 3, 2018 10:46 AM #MURDER #KOLKATA #CHILDREN #NEWBORNS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS