'அடுத்த வருஷம் மே மாசத்துக்குள்ள'.. இந்தியாவுல 50% ஏடிஎம்கள் மூடப்படும்!
Home > தமிழ் newsவருகின்ற மே மாதம் (2019) முதல் இந்தியாவில் உள்ள 50% ஏடிஎம்கள் இருக்காது என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப ஏடிஎம்களில் பணம் எடுத்து செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தியா முழுவதும் குக்கிராமங்களில் கூட ஏடிஎம்கள் ஊடுருவியுள்ளன.குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்களின் தேவை மேலும் அதிகமானது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சுமார் 1.13 லட்சம் ஏடிஎம்கள் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மூடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது 2.38 லட்சம் ஏடிஎம்-கள் உள்ளன. இந்த 2.38 லட்சம் ஏடிஎம்-கள் பழைய ரூபாய் நோட்டை வைப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதில், தற்போதுள்ள புதிய நோட்டுகளை வைப்பதற்கு சிரமமாக உள்ளது.இதற்கு மாற்று ஏற்பாடாக, புதிய மென்பொருள் கொண்ட இயந்திரங்களைத்தான் வைக்க வேண்டும்.
இந்தப் புதிய மாற்றங்களை மேற்கொள்ள, குறைந்தது 2,500 கோடி ரூபாய் தேவைப்படும்.முன்னதாக , பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்-களின் மென்பொருள்கள் மாற்றியமைக்கப்பட்டதில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து வங்கி நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இப்படிப்பட்ட நிலையில், புதிய மென்பொருள் கொண்ட ஏடிஎம்-களை நிறுவுவது என்பது பெரும் சிரமம். இதனாலேயே ஏடிஎம்-களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் மே மாதத்துக்குள், இந்தியாவில் உள்ள 50 சதவிகித ஏடிஎம்-களை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது,'' என வங்கிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம் மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி இழுக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை என, பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- குறைந்துள்ளதா பெட்ரோல்.. டீசல் விலை: இன்றைய நிலவரம்!
- தயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்!
- 4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை!
- 130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்!
- ‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்!
- பட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு!
- 9 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா வெற்றி!
- தமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!
- படேல் சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகம் தவறா?: வைரல் போட்டோ!
- ‘மேட் இன் சைனா’ என எழுதுங்கள்: படேல் சிலை மீது விமர்சனம்!