‘நாங்க காதலிச்சாலும் கூட’.. காதலர் தினத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் சபதம்!

Home > News Shots > தமிழ் news
By |

காதலித்தாலும் பெற்றோர்களின் அனுமதி கிடைத்த பிறகுதான் திருமணம் செய்யப்போவதாக குஜராத்தில் 10,000 மாணவர்கள் சபதம் அளிக்க காத்துக்கிடப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

காதலர்கள் பலரின் கனவுதினமான காதலர் தினத்தன்று பல ஜோடிகள் தங்கள் திருமண முடிவினை பலவிதமாக எடுப்பார்கள். அதில் திருமணம் தொடங்கி தனிக்குடித்தனம், லிவிங் டூ கெதர் என புதுவிதமான ஜோடிகளின் சபதங்களும் அடங்கும்.

இப்படி புதுமையான வகைகளில் காதலர் தினத்தில் சில முடிவுகளை எடுக்கும் இளம் தலைமுறையினர் தங்களின் பெற்றோர்களின் ஆதரவினை கடுகளவு கூட எதிர்பார்ப்பதில்லை. அப்படி திருமண முடிவு எடுக்கும் காதல் ஜோடிகளுக்கு முன் உதாரணமான நிகழ்ச்சி ஒன்றை காதலர் தினத்தன்று ஹஸ்யமேத்வா ஜயதே என்கிற அமைப்பு குஜராத்தில் நடத்தவிருக்கிறது.

அதன்படி, 15 பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து சுமார் 10,000 பேர் அடங்கிய மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வோம் என சபதம் எடுக்க இருக்கின்றனர். மேலும் குறிப்பாக சிங்கிள் ஆக இருப்பவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், அவர்களின் உணர்வுகளை சிறைப்படுத்தும் பெற்றோர்களும் குடிமைச் சமூகத்தில் ஏராளமாய் இருப்பதும், அவர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சி இது அல்ல என்றும் அந்த அமைப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 

VALENTINESDAY2019, LOVE, GUJARAT, PARENTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES