'கட்சி பணத்த செலவு பண்ணுங்க'..பொங்கல் பரிசு விஷயத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி!

Home > தமிழ் news
By |

பொங்கல் பரிசாக தமிழகத்தில் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று தமிழக ஆளுநர் அறிவித்திருந்தார். இதனை தமிழக அரசு சார்பில் அளிக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார். இதனை எதிர்த்து கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் பணத்தை அனைவருக்குமெல்லாம் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 1000 ரூபாய் பரிசினை வழங்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம்,  அரசு பணத்தை செலவிடுகிறீர்கள்’ என்றும் கேட்டுள்ள நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய குழு, ‘எந்த நோக்கத்துக்காக ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. 

உயர் நீதிமன்றம் இப்படியான உத்தரவிட்டுள்ள நிலையில்,  ரேஷன் கடைகளில் ரூ.1000 பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், அதே சமயம் உயர் நீதிமன்ற உத்தரவு பற்றிய சுற்றறிக்கை இன்னும் வரவில்லை எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

MADRASHIGHCOURT, EDAPPADIKPALANISWAMI, TAMILNADU, TNGOVT, CHENNAI, PONGALGIFT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS