'இனி உங்க பர்சனல் கம்ப்யூட்டரை நீக்க மட்டுமல்ல...அரசாங்கமும் பாக்க முடியும்'...பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி!

Home > தமிழ் news
By |

நாட்டில் உள்ள எந்த கணினியையும் கண்காணிக்கும் அதிகாரத்தை சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான உத்தரவை சிபிஐ, அமலாக்கத்துறை, உளவுத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு,மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

 

இப்பொது கணினி இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் இயங்க முடியாது.அதே போல் தனி மனிதர்களுக்கும் கணினி என்பது அத்தியாவசமான ஒன்றாக மாறிவிட்டது.இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

உள்துறை அமைச்சகதின் உத்தரவின்படி உளவுத்துறை, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய விசாரணை குழு, ரா பிரிவு, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையருக்கு இந்த அனுமதியானது  வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளால் எந்த கணினியில் சேகரிக்கப்படும் விவரங்களையும், பரிமாறப்படும் தகவல்களையும் பெற இயலும்.

 

இந்த அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கணினி சேவை வழங்குபவரும் கணினியின் உரிமையாளரும்,தகவலை பெற தேவையான தொழில்நுட்ப உதவிகளை கண்டிப்பாக வழங்க வேண்டும். தகவல்களை அளிக்க தவறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

 

கடந்த 2000ம் ஆண்டில் இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இந்த அதிகாரம் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு இறையாண்மைக்கு அவசியம் என்றால் இது போன்ற உத்தரவுகளை அரசு பிறப்பிக்கலாம் என அந்த சட்டத்தின் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

 

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு என்றாலும்,இதன் மூலம் தனி மனிதனின் தனிப்பட்ட விவரங்கள் வேவு பார்க்கப்படுவதோடு,தனி மனித சுதந்திரமும் பாதிக்கப்படும் என எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன.

HOME MINISTERY, SNOOP, 10 CENTRAL AGENCIES, DELHI POLICE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS