ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. குணதிலகா எந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதை வெளியிடாத கிரிக்கெட் வாரியம், விசாரணை முடியும் வரை அனைத்து வித கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்தும் அவரை 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.


தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடிக் கொண்டிருக்கும் 27 வயதான குணதிலகா இந்த ஆட்டம் முடிந்தவுடன் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவு வெளிவரும் வரை அவர் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த டெஸ்ட்டுக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜெப்ரி வாண்டர்சே ஒரு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடருக்காக அங்கு சென்றிருந்தபோது ஒழுங்கீனமான நடந்துகொண்டதாக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 23, 2018 12:30 PM #DHANUSHKAGUNATHILAKA #SUSPENSION #SPORTS NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS