மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடந்த காரசார விவாதத்திற்கு பிறகு, பிரதமர் மோடி ஞாயிறு அன்று ட்விட்டரில் தன் பின்தொடர்பவர்களுக்கு பதிலளித்தார்.


பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று மக்களவையில் பேசிய தனது உரையை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் கீழ் பதிவிட்டிருந்த ஒருவர், "ஆனால் ஒரு விசயம் மோடி ஜி. நீங்கள் அடிக்கடி சிரிக்க வேண்டும். மற்றதெல்லாம் சிறப்பு," என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் அந்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.


பாராளுமன்ற உரைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூர் சென்ற மோடி அங்கே நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் மத்தியில் பேசினார். அதை ட்விட்டரில் குறிப்பிட்ட ஒருவர் பிரதமர் தனது 60-70 வயதுகளிலும் களைப்பின்றி இருப்பதாக கூறினார். அதற்கு பிரதமர் மோடி, "125 கோடி இந்தியர்களின் ஆசிர்வாதம் எனக்கு பலத்தை அளிக்கிறது. என் அனைத்து நேரமும் தேசத்திற்காகவே," என் பதிலளித்துள்ளார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 22, 2018 4:22 PM #NARENDRAMODI #SMILEMODI #INDIA NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS