அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த பயணியர் மூட்டைப்பூச்சி தொல்லைக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளனர். சென்ற வாரம் அமெரிக்காவின் நெவார்க் நகரிலிருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சௌம்யா ஷெட்டி என்ற அந்தப்பெண் ட்விட்டரில் வெளியிட்ட படத்தில் அவரது கைகள் முழுவதும் தடிப்புகள் இருப்பதைக் காண முடிகிறது.


தனது மூன்று குழந்தைகளுடன் கடந்த புதனன்று பயணம் செய்த அவர் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் அதே இருக்கையிலேயே தூங்க நிர்பந்திக்கப் பட்டதாகவும் மும்பையில் இறங்குவதற்கு சற்று முன்புதான் இருக்கை மாற்றித் தரப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று குழந்தைகளுடன் செல்ல பிசினஸ் கிளாஸ் வசதியாக இருக்கும் என்று நினைத்து பயணம் செய்தால் மூட்டைப்பூச்சி கடியும் வலியும் தான் மிச்சம் என்கிறார் ஷெட்டி.


பிரவின் தொன்சேகர் என்கிற இன்னொரு பயணியும் இதே போன்றதொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். குடும்பத்துடன் நியூயார்க்கில் இருந்து பயணம் செய்த அவர் "ரயில்களில் தான் மூட்டைப்பூச்சி இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் மஹாராஜாவில் (ஏர் இந்தியா) அதுவும் பிசினஸ் கிளாஸில் மூட்டைப்பூச்சிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது," என தெரிவித்திருந்தார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 24, 2018 4:30 PM #AIRINDIA #BEDBUGS #BUSINESSCLASS #INDIA NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS