சமூக வலைதளங்களில் தற்போது ஏதாவது ஒரு நிகழ்வினை குறித்து சேலஞ்ச் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச்,பிட்னெஸ் சேலஞ்ச், கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிடும் சேலஞ்ச் என்று ஜாலியான சேலஞ்ச்களுக்கு நடுவே தற்போது ஆபத்தான சேலஞ்சாக  மாறியிருக்கிறது 'கிகி டான்ஸ் சேலஞ்ச்'.

 

உலக அளவில் ட்ரெண்டித்த அந்த சேலஞ்ச் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.இதன் ஆரம்பம் கனடா பாடகரின் கிகி டூ யு  லவ் மீ என்ற பாடலுக்கு ஓடும் கார்,பைக்,ரயில் என எதில் இருந்தாவது திடீரென குதித்து நடு  ரோட்டில் நடனமாட வேண்டும்.பாடல் முடிந்தவுடன் அதே வாகனத்தில் ஏறி பயணிக்க வேண்டும்.இதை வாகனத்தில் இருக்கும் நபர் வீடியோ எடுப்பார்.

 

இந்த சேலஞ்சை அறிமுகப்படுத்தியவர் அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகரான ஷெக்கி. எவ்வளவு அழகா இருக்கு இந்த சேலஞ்ச்? என்று நினைப்பவர்களுக்கு இதில் இருக்கும் அதிர்ச்சிகள் தெரிவதில்லை. பலர் இந்த சேலஞ்சை செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த சேலஞ்சை  செய்யும் போது கார் விபத்துக்குள்ளாகியும்,மின்கம்பத்தில் மோதியும் பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன.

 

தற்போது இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் 'கிகி சேலஞ்ச்' மோகம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மும்பை மற்றும் டெல்லி காவல் துறை இதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது.சாலை என்பது நடனமாடும் மேடை அல்ல என்றும், அதைமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் மும்பை காவல்துறை அறிவித்துள்ளது.

BY JENO | AUG 1, 2018 5:32 PM #MUMBAI #KIKIDANCECHALLENGE #INDIA NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS