சாட்டை தயாளன்
சாட்டை 2012 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இங்கும் தயா எனும் தயாளன் என்கிற ஆசிரியராக ஒரு குக்கிராமத்துக்கு புதிதாக வரும் ஆசிரியர் தயா, மாணவர்களின் கட்டுப்படுத்தப்பட்ட மனங்களில் இருந்து விடுவிக்கிறார். அவர்களின் பயம், குற்றவுணர்வு உள்ளிட்ட எதிர்மறை சிந்தனைகளை பொசுக்க சொல்லித்தருகிறார். உதவுதல், மன்னித்தல், மெச்சூரிட்டியுடன் நடந்துகொள்ளுதல், கடந்து போதல், கலையார்வத்துக்கு மனம் கொடுத்தல், பருவநிலையிலேயே பாலியல் புரிதல் உள்ளிட்ட சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கிறார். ஆனால் மாணவர்களின் எழுச்சிக்கும் புதிய சிந்தனைகளுக்கும் தடையாக பழைய வாய்பாட்டு முறையையே வலியுறுத்தும் ஆசிரியர்களின் பக்கம் திரும்பி சாட்டையடி அடிக்கிறார். அதனால்தான் அவர் போகும்போது போகாதீங்க சார் என கதறும் மாணவர்களை காண முடியும். இந்தியா முழுவதும் அப்படியான ஆசிரியர்கள் போகும்போது மாணவர்கள் அவர்களை கட்டிக்கொண்டு போகாதீங்க சார் என கதறிய நினைவுகளை அந்த காட்சி கண்முன் நிறுத்தியது.