நம்மவர் செல்வம்
மாணவர்களை நல்வழிப்படுத்த நினைக்கும் டாக்டர் செல்வம்(கமல்), அதே மாணவர்களை தன் சொந்த வெறுப்புக்காகவும், தந்தையின் தொழில் கொடுக்கும் ஆதிக்க மனப்பான்மையின் பாதுகாப்புக்காகவும் திருந்த விடாமல் செய்கிறார் ரமேஷ்(கரண்). ஆனால் செல்வமோ ஒரு பொறுப்புள்ள ஆசிரியராக மாணவர்களின் தவறுகளை அவர்களின் வழிநின்று அவர்களின் மனநிலையிலேயே உளவியல் ரீதியாக அணுகி, அவர்களின் சிலபஸ் எனும் பல்ஸை பிடித்து அவர்களுக்கு பாடம் எடுப்பதில் நம்மிடையே ஒட்டிக்கொள்கிறார்.
குறிப்பாக, வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருக்க, அங்கு அனுமதி இல்லாமல் உள்ளே வரும் ரமேஷை, உள்ளே அனுமதிக்காமல். ‘ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆச்சு’ என சொல்லிவிட்டு பாடம் நடத்துவார் செல்வம். ஆனால் அந்த பத்து நிமிடத்தில் அப்படி என்ன நடத்தி கிழிச்சிட்டீங்க? என ரமேஷ் கேட்க.. அதற்கு, ‘அட .. அரட்டையாவே இருக்கட்டுமே.. நடுவுல வந்தா எப்படி புரியும்?’ என ஸ்கோர் செய்யும் செல்வம் ஒரு மாடர்ன் ஆசியர்தானே?