சத்தியராஜ்

3 of 8
பாகுபலியில் வரும் கட்டப்பா கதாப்பாத்திரம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட சத்தியராஜ் தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முக்கியமான ஹீரோ.
கவுண்டமணி-சத்தியராஜ் காம்போ காமெடி காட்சிகளை இன்று திரையில் கண்டால் கூட விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். ஆனால் ஹீரோ ஆவதற்கு முன் அவர் மணிவணனின் இயக்கத்தில் நடித்த நூறாவது நாள் வில்லன் ரோல் யாராலும் மறந்திருக்க முடியாது.
அந்த கதாப்பாத்திரத்தின் வித்தியாசமான கெட் அப் பலரை இன்று கூட அச்சப்பட வைக்கும். அதே சத்தியராஜ் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது படத்தில் ஏற்று நடித்த பாலுத்தேவர் கதாப்பாத்திரம் ஒரு சிறப்பான குணச்சித்திர நடிகராக அவரை அடையாளம் காட்டியது.