நாச்சியார் விமர்சனம்

Home > Slideshows

By

நாச்சியாரின் பலம்:

நாச்சியாரின் பலம்:

 

படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு தகுந்த நியாயத்தை செய்துள்ளனர். குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் 'அழுக்குப்பையனாகவே' படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்.

 

இதேபோல ஜோதிகாவின் நடிப்பும், ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது. நாச்சியாரின் மொத்த நீளம் 100 நிமிடங்கள் என்பது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்.

 

இயக்குநர் பாலா தனது வழக்கமான பாணியை உடைத்து நாச்சியாரை இயக்கியிருக்கிறார். அவரது முந்தைய படங்கள் போல மனதை வருத்தும் காட்சிகள், சோக கிளைமேக்ஸ் என எதுவும் இப்படத்தில் இல்லை. அதேபோல படத்துடன் ஒன்றிய காமெடிக்காட்சிகளும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

 

பின்னணி இசையில் தான் ஒரு ராஜா என்பதை,  இளையராஜா மீண்டும் ஒருமுறை அழுத்தமாக  நாச்சியாரில் நிரூபித்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவு மற்றும் சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் நாச்சியாருக்கு கச்சிதம்.