ட்ரீம் வாரியர்ஸ் புரொடக்சன் சார்பாக எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, திருப்பூர் விவேக் ஆகியோரின் தயாரிப்பில் கார்த்தி, நரேன், விஜய் டிவி தீனா மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் 'கைதி'.
ஒரு போதை கடத்தல் கும்பல் தமிழ்நாட்டிற்குள் பெரிய அளவில் போதை மருந்துகளை கடத்த முயற்சி செய்கிறது. இதனை காவல் அதிகாரி நரேன் தடுத்து அந்த போதைப்பொருட்களை சீஸ் செய்கிறார். சுமார் 850 கோடி மதிப்பிளான 900 கிலோ போதை பொருட்களை சீஸ் செய்த போலீஸ் அதிகாரி நரேன்-யை கொன்று, போதை மருந்தினை திருப்பி கொண்டு செல்ல கடத்தல் காரர்கள் திட்டம் போராடுகிறார்கள்.
நரேனுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் நடக்கும் சண்டையில் கார்த்தி எப்படி சிக்கினார்? இறுதியில் என நடந்தது? கார்த்தி அவரது மகளை சந்தித்தாரா? என்பதே படத்தின் கைதி.
படம் தொடங்கிய இருபதாவது நிமிடத்திலேயே படத்தின் கிளைமாக்ஸை நோக்கி திரைக்கதை அமைத்து சுவாரஸ்ய படுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஒரு இரவில் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி பாராட்டைப் பெறுகிறார் சத்யன் சூரியன். சாம் சி.ஸ் அழுத்தமான பின்னணி இசை திரைக்கதையை நகர்த்த பலமாக அமைந்துள்ளது.
படம் படுவேகம், எந்த ஒரு காட்சியையும் நம்மால் ஊகிக்க முடியவில்லை. பாடல் இல்லாததும் சண்டைக் காட்சிகளும் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட். பாடல்கள் இடம்பெற்றிருந்தால் நிச்சயம் கதையின் வேகம் குறைந்திருக்கும். படத்தில் ஹீரோயின் இல்லாததும் படத்தில் குறையாகவே தெரியவில்லை. மொத்தத்தில் தீபாவளிக்கு மிகச்சிறப்பான ட்ரீட் கொடுத்துள்ளனர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி.