சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தர்பார். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி, இயக்கியுள்ளார்.
மும்பையில் நடைபெறும் டிரக் மாஃபியா கும்பலின் குற்றங்களை தடுக்க, டெல்லியில் இருந்து மும்பை கமிஷனராக பணி மாற்றம் செய்யப்படுகிறார் ஆதித்யா அருணாச்சலம். அதன் பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.
ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். I am a bad Cop என வில்லன்களுக்கு வில்லத்தனத்தின் உச்சத்தனத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகள் , டான்ஸ், காமெடி என ரஜினியின் எனர்ஜி கொல மாஸ். சீரியஸாக நகரும் கதையில் அவ்வப்போது தோன்றி தனது அழகிய நடிப்பால் நயன்தாரா இதமளிக்கிறார்.
ஆதித்யாவின் மகள் வள்ளியாக நிவேதா தாமஸ். படத்தில் முக்கியமான வேடம். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார் நிவேதா தாமஸ். ஒரிஜினலாகவே நான் வில்லன்மா என ரஜினி ஒருபக்கம் இறங்கி அடிக்க, அவருக்கு சரி நிகர் வில்லனாக களமிறங்கியிருக்கிறார் சுனில் ஷெட்டி. யோகி பாபு படத்தின் காமெடி அத்தியாயங்களுக்கு பெரிதும் துணை புரிந்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கவுண்டர் கொடுத்து கலாய்க்க, அதற்கு ரஜினி, இருடா உன்ன வச்சுக்கிறேன் என காண்டாகும் இடங்களில் தியேட்டரே வெடித்து சிரிக்கின்றன.
அனிருத் தனது பின்னணி இசையால் ஒரு மாஸான படத்துக்கு கூடுதல் மாஸ் சேர்த்திருக்கிறார். சந்தோஷ் சிவனின் கேமரா சண்டைக்காட்சிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
'ரொமான்ஸே...' பாடலில் நிவேதா தாமஸ் தனது அப்பா ரஜினிக்கு நயன்தாராவிடம் ரொமான்டிக்காக பேச சொல்லி கொடுக்க, அங்கு ரஜினி சொதப்பி கியூட்டான ரியாக்சன்கள் கொடுக்கும் இடம் கிளாஸ். மேலும் எதிரிகளுக்கே ஐடியாக கொடுத்து கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என ரஜினி கலாய்க்கும் முதல் பாதி சுவாரசியமாக இருந்தன. ஆங்காங்கே காட்சிகளில் உள்ள லாஜிக் மீறல்கள் படத்தின் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. இருப்பினும் ஒரு கம்ப்ளீட்டான சூப்பர் ஸ்டார் படமாக கவனம் ஈர்க்கிறது இந்த தர்பார்.