Petta USA All Banner

விஜய்யுடன் மீண்டும் இணையும் யோகி பாபு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தன் எதார்த்தமான பேச்சு மற்றும் முகபாவனைகளால் ரசிகர்களை மனதை வெகுவாகக் கவர்ந்தவர் யோகிபாபு. தற்போது வெளியாகும் படங்களில் அவர் இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் எனும் அளவுக்கு அவரது பங்களிப்பு இருக்கிறது.

Yogi babu to act in thalapathy 63 with vijay directed by atlee

விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாது , புதுமுக நடிகர் படங்கள் என அனைத்திலும் யோகிபாபுவின் மயம். 

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் யோகிபாபுவும் இணைந்துள்ளார். நடிகர் விஜய் பொதுவாகவே நகைச்சுவை  உணர்வு கொண்டவர்.

இந்த இருவரது காம்பினேஷனில் வந்த மெர்சல் , சர்கார் ஆகிய படங்களில் காமெடி காட்சிகள் நன்றாக இருந்தது. அதனால் தற்போது தளபதி 63யில் யோகி பாபு இணைந்திருப்பதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பாராட்டுக்களை பெற்று வரும் கதிர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

Yogi babu to act in thalapathy 63 with vijay directed by atlee

People looking for online information on AGS Entertainment, Kathir, Nayanthara, Thalapathy 63, Vijay, Yogi Babu will find this news story useful.