STM Mob Banner USA
VRV Mob Banner USA

‘96’ இயக்குநருக்கு ராம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் என்ன தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தின் இயக்குநருக்கு விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.

Vijay Sethupathi gifts a new Bullet bike to '96' director Prem Kumar

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ஜானு, ராமச்சந்திரன் கதாபாத்திரம் அமோக வரவேற்பை பெற்றது. பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ‘96’ திரைப்படபடம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பிரேம்குமாருக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். விஜய் சேதுபதி ஒரு தீவிர புல்லட் பிரியராம். அதுவும் புல்லட் என்றால் அவ்ருக்கு மிகவும் பிடிக்குமாம். அதனால், இயக்குநர் பிரேம்குமாருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள புல்லட் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.

மணிக்கு 170 கி.மீ வேகம் செல்லுக் கூடிய இந்த புல்லட்டிற்கு ‘0096’ என்ற பதிவு எண்ணையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தமிழில் மாபெரும் வெற்றியடைந்த இப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Vijay Sethupathi gifts a new Bullet bike to '96' director Prem Kumar

People looking for online information on 96 Tamil, Bullet gift, Premkumar, Trisha, Vijay Sethupathi will find this news story useful.