சேரனின் 'திருமணம்' படத்திலிருந்து வெளியான சில நிமிட காட்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நீண்ட இடைவேளைக்கு பிறகு சேரன் இயக்கியிருக்கும் படம் 'திருமணம்' இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.

Sneak Peek released from Charen's Thirumanam

இந்த படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்துக்கு சித்தார்த் விபின்  இசையமைத்துள்ளார்.

தற்போதைய காலத்தில் திருமணம் செய்துகொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த படம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சேரன் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து சில காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சேரன் வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கிறார். அப்போது அந்த வழக்கறிஞர் விவாகரத்து எதனால் நிகழ்கிறது என்பது குறித்து விளக்குகிறார்.

சேரனின் 'திருமணம்' படத்திலிருந்து வெளியான சில நிமிட காட்சி VIDEO

Sneak Peek released from Charen's Thirumanam

People looking for online information on Cheran, Siddharth Vipin, Thambi Ramaiah, Umapathy will find this news story useful.