STM Mob Banner USA
VRV Mob Banner USA

தமிழ் சினிமாவின் ‘நகைச்சுவை மன்னன்’ பயோபிக்கில் பிரபுதேவா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவின் ‘நகைச்சுவை மன்னன்’ என்றழைக்கப்படும் சந்திரபாபுவின் பயோபிக்கில் நடிக்க நடிகர் பிரபுதேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Prabhu Deva to do this Legendary actor Chandrababu's biopic

தமிழில் ‘யங் மங் சங்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானை வைத்து ‘தபாங் 3’ திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நகைச்சுவை மன்னருமான சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 1950-60களில் முன்னணி கதாநாயகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு நிகராக சம்பளம் வாங்கியவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.  மேற்கத்திய ஸ்டைலில் இருக்கும் சந்திரபாபுவின் காமெடி டைமிங்கும், பாடல்களும் மிகவும் பிரபலம். எம்.ஜி.ஆரை வைத்து சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார்.

இவரது பயோபிக்கில் நடிக்க பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்ற அடிப்படையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Prabhu Deva to do this Legendary actor Chandrababu's biopic

People looking for online information on Chandrababu Biopic, J.P.Chandrababu, Prabhudeva will find this news story useful.