தளபதி விஜய்யின் மெர்சல் கொண்டாட்டம்: பீட்டர் பீட்ட ஏத்து மேக்கிங் வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘மின்சார கனவு’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ திரைப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

Peter Beata Yethu Song Making video released

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளளார். ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ரிதத்தை கொண்டாடும் பாடலாக இடம்பெற்றுள்ள ‘பீட்டர் பீட்ட ஏத்து’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் மெர்சல் பட கொண்டாட்டத்தின் பின்னணியில் இப்பாடல் உருவான விதம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், ரசிகர் தங்களுக்கு விருப்பமான ஹீரோவின் படத்தை எப்படி கொண்டாடுகின்றனர் என்பதை கொண்டாட்டம் மோடில் உணர்த்தியிருக்கும் பாடல் பீட்டர் பீட்ட ஏத்து. இது ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் உருவான மென்மையான குத்து பாடலாக உருவாகியுள்ளது.

பொதுவாக திரைப்படங்களில் பெரிய ஹீரொக்களின் திரைப்படங்களை கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பீட்டர் பீட்ட ஏத்து பாடலில் நிஜமான கொண்டாட்டத்தை படமாக்கினோம். மெர்சல் திரைப்படம் ரிலீசின் போது தியேட்டர் வெளியே ரசிகர்கள் கொண்டாடுவதை படமாக்கினோம். இப்பாடல் ஒரு பேட்ட ரேப் பாடலை போன்று ஹிட்டாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடலை ஜி.வி.பிரகாஷ், சத்ய பிரகாஷ், அர்ஜூன் சாண்டி இணைந்து பாடியுள்ளனர். 'MINDSCREEN சினிமாஸ்' நிறுவனம் சார்பில் லதா தயாரித்துள்ள இப்படத்தில் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, டிடி, சாந்தா தனஞ்செயன், சுமேஷ், வினித் ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி.1ம் தேதி வெளியாகவுள்ளது.

தளபதி விஜய்யின் மெர்சல் கொண்டாட்டம்: பீட்டர் பீட்ட ஏத்து மேக்கிங் வீடியோ இதோ VIDEO

Peter Beata Yethu Song Making video released

People looking for online information on A.R.Rahman, G. V. Prakash Kumar, Peter Beata Yethu, Rajiv Menon, Sarvam T, Sarvam Thaala Mayam, Thalapathy Vijay Celebration will find this news story useful.