ஹரிஷ் கல்யாணின் அடுத்தப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Harish Kalyan's 'Ispade Rajavum Idhay Raniyum' releasing on March 15

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்தப் படமும் காதல் படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன், மாகாபா ஆனந்த், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘கண்ணம்மா’, ‘ஏய் கடவுளே’ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் இடம்பிடித்தது. ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச்.15ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

Harish Kalyan's 'Ispade Rajavum Idhay Raniyum' releasing on March 15

People looking for online information on Harish Kalyan, Ispade Rajavum Idhaya Raniyum, Ranjith Jeyakodi, Shilpa Manjunath will find this news story useful.