STM Mob Banner USA
VRV Mob Banner USA

‘எங்க வீட்டு மாப்பிள்ளை 2’ரெடியா?- ஆர்யாவை வம்புக்கு இழுத்த பிரபலம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ஆர்யா வெளியிட்ட ஒர்க்-அவுட் வீடியோவை பார்த்த நடிகர் சதீஷ் அவரை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

'Enga Veetu Mappilai 2'? Actor Sathish teases Arya on his workout video

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் தனது வருங்கால மனைவியை தேர்ந்தெடுக்கப்போவதாக நடிகர் ஆர்யா தெரிவித்தார். இதையடுத்து ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ள 16 பெண்கள் போட்டியில் பங்கேற்றனர்.

அவர்களுக்கு பல்வேரு சுற்றுகள் வைக்கப்பட்டு இறுதியாக 3 பெண்களை ஆர்யா தேர்வு செய்திருந்தார். அவர்களில் ஒருவரை தான் ஆர்யா திருமணம் செய்துக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 3 பேரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து மற்ற 2 பேரை காயப்படுத்த விரும்பவில்லை எனக் கூறி மூவரையுமே ஆர்யா நிராகரித்தார்.

இந்நிகழ்ச்சி மூலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆர்யா, தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், எப்போதும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஆர்யா ஈடுபடுவது வழக்கம். அதுபோன்று சமீபத்தில் அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆர்யாவின் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்த நிலையில், நடிகர் சதீஷ் நக்கலாக ‘இல்லையே.. பாத்தா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை 2’-க்கு ரெடியாகுற மாதிரி இருக்கே..’ என ட்வீட் செய்தார். அதற்கு ஒரு ஸ்மைலியை ஆர்யா தட்டிவிட, ‘சாரி டார்லிங்.. வாட்ஸ் அப்-னு நினைச்சி ஓபனா டைப் பண்ணிட்டேன்..’ என ட்வீட் செய்துள்ளார்.

'Enga Veetu Mappilai 2'? Actor Sathish teases Arya on his workout video

People looking for online information on Arya, Enga Veetu Mappillai 2, Fitness trainer, Sathish, Workout will find this news story useful.