Petta USA All Banner

பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படத்துக்காக முக்கிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படமும், அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகின.  இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைத்துள்ளன.

court order for Viswasam and Petta ticket rate

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் மதுரையில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து மதுரையிலுள்ள 22 திரையரங்குகளிலும் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை குழு ஒன்றை அமைத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இந்த குழுவில் வருமான வரித்துறையினர், நகராட்சி அலுவலர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Court order for Viswasam and Petta ticket rate

People looking for online information on Ajith Kumar, Petta, Rajinikanth, Viswasam will find this news story useful.