STM Mob Banner USA
VRV Mob Banner USA

பத்தாண்டுகளுக்கு பின் அதே நாள், அதே இடம் - கேக் வெட்டிக் கொண்டாடிய இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கபடி விளையாட்டை மையமாக வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலாக் கபடிக்குழு. இந்த படம் தான் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோருக்கு முதல் படம்.

10 Years of Vennila kabbadi kuzhu celebration in Suseenthiran's Kennedi club

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சூரியும் பிரபலமானார். இந்த படத்தில் அவர் புரோட்டா திண்ணும் காட்சி ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் ஆகிறது. இயக்குநர் சுசீந்திரன் அதன் பிறகு நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர் சசிக்குமார், பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் கென்னடி கிளப் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 10 வருடங்களுக்கு முன் வெண்ணிலாக் கபடிக்குழு படமாக்கப்பட்ட இடத்திலேயே தான் படமாக்கப்படுகிறது.

இதனையடுத்து சுசீந்திரன் திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து கென்னடி கிளப் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது இயக்குநர் இமையம் பாரதிராஜா, சுசீந்திரன், சசிக்குமார், சூரி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

10 Years of Vennila kabbadi kuzhu celebration in Suseenthiran's Kennedi club

People looking for online information on Bharathiraja, Kennedy Club, M Sasikumar, Soori, Suseenthiran, Vennila Kabadi Kuzhu will find this news story useful.