"திரும்பவும் அதே டீம் கூட..!" - அஜித்தின் ‘வலிமை’ யுவன் ஷங்கர் ராஜா நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்திற்காக மீண்டும் ஒரே கூட்டணியில் இணைவது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Yuvan happy to team up again with Ajith and H.vinoth for Valimai

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோர்ட் ரூம் டிராமாவான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் பூஜை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லாசியுடன் நேற்று (அக்.18) நடைபெற்றது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘வலிமை’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து மீண்டும் ‘வலிமை’ படத்திற்காக அஜித், ஹெச்.வினோத், யுவன், நீரவ் ஷா ஆகியோர் இணைந்துள்ளனர். இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “திரும்பவும் அதே டீம் கூட இணைவதில் மிக்க மகிழ்ச்சி. #AK60 வலிமை..” என ட்வீட் செய்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படம், போலீஸ் வேடம் என்பதால் தல அஜித்திற்கான தீம் மியூசிக் மற்றும் படத்தின் பின்னணி இசைக்கான எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan happy to team up again with Ajith and H.vinoth for Valimai

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.