www.garudavega.com

ஆஜீத், கேப்ரியலாவுக்கு ஏன் 'அப்படி' பண்ணல?... 'அவங்க' மட்டும் என்ன ஸ்பெஷல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெறும் பேசும் டாஸ்க் மட்டுமே கொடுக்கிறார்கள். ரொம்ப போரடிக்குது இந்த சீசன் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். ஏனெனில் இந்த வாரம் கோர்ட் டாஸ்க்கை வைத்து ரொம்ப நீளமாக இழுத்து வருகின்றனர். இன்று வெளியான ப்ரோமோக்களிலும் சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவுக்கு இன்னும் சற்று நேரத்தில் என விளம்பரம் எல்லாம் செய்தனர்.

Why Aajeedh and Gabriella Mom's Birthday not Telecasted?

கடைசியில் பாலாஜிக்கு, ஷிவானி ஊட்டிவிடும் ப்ரோமோ வெளியானது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்து இருக்கலாம் என கதறி வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க சம்யுக்தாவின் குட்டி மகன் ரயான் பர்த்டே வீடியோ அகம் டிவியில் ஒளிபரப்பாவது போலவும், அதைப்பார்த்து சம்யுக்தா அழுவது போலவும் 3-வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வீட்டின் கேப்டனாகி படாதபாடு படுகிறார் என்பதால் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை சம்யுக்தாவுக்கு பரிசாக அளித்தார்களா? என்பது தெரியவில்லை.

ஆனால் இதைப்பார்த்து ரசிகர்கள் டென்ஷனாகி இருக்கின்றனர். அதாவது ஆஜீத் அம்மா பிறந்தநாள், கேப்ரியலா அம்மா பிறந்த நாள், அர்ச்சனா கணவர் பிறந்தநாள் ஆகியவற்றுக்கு இதுபோல வீடியோ எதுவும் அவர்களுக்கு பிக்பாஸ் அளிக்கவில்லை. ரமேஷ், நிஷா பிறந்தநாள் மட்டுமே இதில் விதிவிலக்கு. நிலைமை இப்படியிருக்க சம்யுக்தாவுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷலா இப்படி பண்றீங்க பிக்பாஸ்? என ரசிகர்கள் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Why Aajeedh and Gabriella Mom's Birthday not Telecasted?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.