விஜய்யின் மாஸ்டர் டைரக்டர் லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் - படக்குழுவுடன் ஒரு மாஸ்டர் செல்ஃபி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் எடுத்த செல்ஃபி ஒன்று தற்போது ஆன்லைனை கலக்கி வருகிறது.

விஜய் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த சர்ப்ரைஸ் | vijay's master director lokesh kanagaraj visits vineeth srinivasan sets

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மலையாள இயக்குநர் வினித் ஶ்ரீநிவாசனின் பட செட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். படக்குழுவை சந்தித்து பேசிய அவர், அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துள்ளார். இப்புகைப்படத்தை பதிவிட்ட வினித் ஶ்ரீநிவாசன், 'உங்கள் படத்தை காண ஆர்வமாக உள்ளோம். வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த சர்ப்ரைஸ் | vijay's master director lokesh kanagaraj visits vineeth srinivasan sets

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi, Vineeth Sreenivasan will find this news story useful.