விஜய்யின் பிகில்.. ஃபுட்பால் சீனை இப்படிதான் எடுத்தோம் - ஒளிப்பதிவாளர் சொல்லும் சீக்ரட்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் ஃபுட்பால் காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு மனம் திறந்துள்ளார். 

விஜய்யின் பிகில் ஷூட்டிங் சீக்ரட்ஸ் | vijay's bigil cinematographer gk vishnu opens on football match making

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். அட்லி இயக்கிய இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். ஜி.கே.விஷ்ணு இப்படத்தை ஒளிப்பதிவு செய்தார். தீபாவளிக்கு வெளியான பிகில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தது. 

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிகில் படத்தின் ஃபுட்பால் காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''பிகில் படத்தின் நான் பல லென்ஸ் ஃபில்டர்களை வித்தியாசமாக கலந்து பயன்படுத்தினேன். அந்த காட்சியின் மூடுக்கு ஏற்பவும், சில சமயம் எனது மூடுக்கு ஏற்பவும் அதை பயன்படுத்தினேன். மேலும் ஃபுட்பால் ஸ்டேடியம் காட்சிகளுக்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விளக்குகளை Flood Light-ஆக அதிகமாக பயன்படுத்தினோம்'' என அவர் தெரிவித்துள்ளார். 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் பிகில் ஷூட்டிங் சீக்ரட்ஸ் | vijay's bigil cinematographer gk vishnu opens on football match making

People looking for online information on Atlee, Bigil Tamil, G.K.Vishnu, Vijay will find this news story useful.