ASURAN USA OTHERS

''உலக அளவில் சிறந்த படமா இருக்கும்'' - விஜய்யின் தளபதி 64 குறித்து தயாரிப்பாளர் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கியுள்ள 'பிகில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Vijay, Vijay Sethupathi, Anirudh's Thalapthy 64 will be world's best film

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்னர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தளபதி விஜய் 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ XB Film Creators சார்பாக தயாரிக்கவிருக்கிறார். இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தளபதி 64 'திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக இருக்கும். மேலும் இந்த படம் மிகப் பெரும் பொருட் செலவில் உருவாகும் படம். இந்த படம் உலகத்திலேயே சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay, Vijay Sethupathi, Anirudh's Thalapthy 64 will be world's best film

People looking for online information on Anirudh Ravichander, Malavika Mohanan, Thalapathy 64, Vijay, Vijay Sethupathi will find this news story useful.