'கெத்தா வர்ரோம்' - இந்த வெங்கட் பிரபு படம் குறித்து வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆர்.கே நகர்'. இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சனா நடித்துள்ளார். 

Venkat Prabhu and Vaibhav's RK Nagar will release on June

மேலும் இந்த படத்தில் இனிகோ பிரபாகரன், சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சரவண ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பிரவீன் கேஎல் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து அப்போது வெங்கட் பிரபு உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பெனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளது. அதில், 'சில கஷ்டங்களுக்கு பிறகு அன்பு மற்றும் ஆதரவால் ஆர்கே நகர் ஜூன் மாதம் வெளியாகிறது. தேதி குறித்து விரைவில் அறிவிப்போம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Venkat Prabhu and Vaibhav's RK Nagar will release on June

People looking for online information on Premgi, Rk nagar, Vaibhav, Venkat Prabhu will find this news story useful.