BREAKING: ‘படம் ரொம்ப பிடிச்சிருக்கு..’- உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றிய புதிய படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பக்ரீத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.

Udhayanidhi Stalin's Red Giant Movies bags theatrical rights of Vikranth's Bakrid film camel

எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜெகதீசன் சுபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை பார்த்த உதயநிதிக்கு படம் பிடித்துவிட்டதால் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

‘சுட்டுப்புடிக்க உத்தரவு’, ‘வெண்ணிலா கபடி குழு 2’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு நடிகர் விக்ராந்த் நடிப்பிக் வெளியாகும் திரைப்படம் ‘பக்ரீத்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படமான ‘பக்ரீத்’ திரைப்படத்தை ஆகஸ்ட்.9ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Udhayanidhi Stalin's Red Giant Movies bags theatrical rights of Vikranth's Bakrid film camel

People looking for online information on Bakrid, Red Giant Movies, Udhayanidhi Stalin, Vikranth will find this news story useful.