''விஜய் மற்றும் விக்ரம் மாதிரி இருங்க, கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம்'' - காவல்துறை அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் நேற்றைய (ஏப்ரல் 7) நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வர, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Thiruvannamalai district police creates Coronavirus awareness memes using Vijay and Vikram's movie scenes | விஜய் மற்றும் விக்ரம் பட காட்சியை கொண்டு கொரோனா விழி

மேலும் மக்களுக்கு எளிதில் புரியும் படி மாவட்டங்கள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் செய்திகள் வெளியாகின்றன. மேலும் கொரோனாவின் தாக்கத்தை உணர்த்தும் படி, ஊரடங்கை மீறி வெளியில் வருவோருக்கு காவல்துறையினர் வித்தியாசமான தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை காவல்துறையினர் சினிமா போஸ்டர்களை கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மெர்சல் படத்தில் தளபதி விஜய் மாஸ் காட்சி ஒன்றில் இருகரங்களையும் கூப்பி வணக்கம் சொல்லுவார். இதனை குறிப்பிட்டு மற்றொருவருடன் கைகுலுக்குவதை தவிருங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 'தாண்டவம்' படத்தில் போஸ்டரில் விக்ரம் மற்றும் அனுஷ்கா விலகி அமர்ந்திருக்கும் ஸ்டில்லில் சமூக விலகலை கடைபிடிக்குமாறும் அறிவுரை வாசகம் இடம் பெற்றுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Thiruvannamalai district police creates Coronavirus awareness memes using Vijay and Vikram's movie scenes | விஜய் மற்றும் விக்ரம் பட காட்சியை கொண்டு கொரோனா விழி

People looking for online information on Coronavirus, Vijay, Vikram will find this news story useful.