தல அஜித் அதிகம் வெளியே வராம இருக்கறதுக்கு இதான் காரணம்! அலிஷா அப்துல்லாவின் ஃபோட்டோ ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமாக இருப்பார்கள். வெகு சில நடிகர்களுக்குத்தான் ரசிகர்கள் பெரும் படைகளாக இருப்பார்கள். தல அஜித்தும் அவரது  ரசிகர்களும் இரண்டாவது ரகம்.

The reason Thala Ajith not coming out in public

அஜித் ஷூட்டிங் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களை குடும்பத்துடன் செலவிடுதையே அதிகம் விரும்புகிறவர்.  தவிர்க்க முடியாத காரணங்களுக்குத்தான் வெளியே செல்வார்.

இந்நிலையில் ரேஸிங் சாம்பியன் அலிஷா அப்துல்லா சமீபத்தில் தன்னுடைய ட்விட்டரில் அஜித் அதிகம் வெளியே வராததன் காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்று குறிப்பிட்டு அஜித்துடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவுடன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்தது, ''தல அஜித் பொதுவெளிகளுக்கு அதிகம் வராததுக்கு காரணம், மக்கள் அவருக்கான இடத்தை தரலை, இது ரேஸ் டிராக்கில் நடந்த ஒரு நிகழ்வு, இங்க அவரால ப்ரீயா நடக்கக் கூட முடியலை.  இது அஜித் சாரின் இன்னொரு ஃபோட்டோ  அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியவிலை, இதுக்கப்புறம்தான் அவர் அதிகம்  வெளியே வர வேண்டாம்னு முடிவு செய்தார்’ என்று ட்வீட்டியிருந்தார் அலீஷா.

இந்தப் பதிவை வழக்கம் போல அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.  இதற்கு முன் அஜித் அலிஷாவை வாழ்த்தியிருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

The reason Thala Ajith not coming out in public

People looking for online information on Ajith fans, Ajith Kumar, Alisha Abdulla, Thala will find this news story useful.