Bigil USA mbl Others

‘பிகில்’ வெறித்தனத்துக்கு முன்பு வெறித்தனம் காட்டிய தளபதி ரசிகர்கள் - வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை காண குவிந்த ரசிகர்களுக்கு கை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

Thalapathy Vijay meets his fans in Thalapathy 64 shooting spot

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கி 3 வாரம் வரை தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது.

சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தளபதி 64 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை காண குவிந்த ரசிகர்களை நோக்கி காரில் இருந்தபடி, அவர் கை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘பிகில்’ வெறித்தனத்துக்கு முன்பு வெறித்தனம் காட்டிய தளபதி ரசிகர்கள் - வீடியோ வீடியோ

Thalapathy Vijay meets his fans in Thalapathy 64 shooting spot

People looking for online information on Atlee, Bigil, Lokesh Kanagaraj, Thalapathy 64, Vijay will find this news story useful.