வேற லெவல் தல..! - துப்பாக்கிச் சுடுதலிலும் அஜித் கெத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்குமார் தேசிய அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்துக் கொள்வதற்காக தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளார்.

Thala Ajith to participate in National Level shooting competition

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித்திற்கு துப்பாக்கிச்சுடுவதிலும் அதீத ஆர்வம். அவ்வப்போது அஜித் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

துப்பாக்கிச்சுடும் உரிமம் வைத்துள்ள அஜித், கோயம்பத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித் குமார் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி மையத்தில், குவாலிஃபிகேஷன் ரேஞ்ச் 10 மீட்டருக்கான போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித் நேற்று (அக்.4) டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவரது புதிய கெட்டப்பை பார்த்து அசந்தனர். வழக்கமான தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து ஸ்டிலைஷ் லுக்கில் அஜித் காணப்பட்டார்.

தற்போது டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் அஜித் கலந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த போட்டியிலும், அஜித் தேர்ச்சி பெற்று திரும்புவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மீண்டும் போனி கபூர், ஹெ.வினோத் கூட்டணியில் ‘தல 60’ ஆக்ஷன் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளில் தற்போது நடிகர் அஜித் பிசியாக இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith to participate in National Level shooting competition

People looking for online information on Ajith Kumar, Rifle shooting, Thala 60, Thala Ajith will find this news story useful.