ஏப்ரல் 14 -ல் சன் டிவியில் சூர்யா ஃபேன்ஸ்க்கு செம சர்ப்ரைஸ் - வெளியாகும் ஸ்பெஷல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற பைலட்டாக நடித்துள்ளார். இந்த படம் ஏர் டெக்கன் குரூப் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதன் படி 'சூரரைப் போற்று' படம் உருவான கதை - மேக்கிங் வீடியோ சன் டிவியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14) காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் வெய்யோன் சில்லி, மண்ணுருண்ட பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. நிகேத் பொம்மி ரெட்டி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Suriya's Soorarai Pottru making video to release on April 14 in Sun TV | சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ ஏப்ரல் 14 ல் சன்டிவியில�

People looking for online information on GV Prakash, Soorarai Pottru, Sun TV, Suriya will find this news story useful.